ADDED : மே 29, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கொண்டாடப்பட்டது.
பார்லி.,யில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் நிறுவிய நாளையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் செங்கோல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நேற்று நடராஜர் கோவிலில் செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளாறு பதிகம் பாடி, தருமம் நிலைக்க வேண்டி கோவில் தீட்சிதர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி செயலாளர் ஜெயசூர்யா, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டன.
