/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
/
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
ADDED : பிப் 16, 2024 12:06 AM
கடலுார் : பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம் என, அறிவிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இன பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் இது, செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண் டுக்கு 4000 ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை, வருமான சான்று மற்றும் ஜாதி சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் அதன் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.