/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம்
ADDED : அக் 18, 2024 06:39 AM
கடலுார்: கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் நவ., 14ம் தேதி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கடலுார், கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன. வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000 வழங்கப்பட உள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாக தேர்வு செய்து சிறப்ப பரிசு தொகை தலா ரூ. 2000 வழங்கப்படும்.
எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், மாணவர்களை தேர்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும். தபாலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில், நவ., 13ம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு, சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பிலும், கல்லுாரிகளுக்கு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும்.
நவ., 14ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 9:30 மணிக்கும், கல்லுாரி போட்டி மாலை 2:30 மணிக்கும் தொடங்கப்படும். இப்போட்டிகளில் கடலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.