/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 07, 2025 01:53 AM
சிதம்பரம்: காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராஜர் 122வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் இணைய வழி மற்றும் அஞ்சல் வழியில் நடத்தப்படுகிறது.
இதில், ஓவியம் மற்றும் பேச்சு போட்டி இணைய வழியில் நடக்கிறது. துவக்கப் பள்ளி மாணவர்கள் காமராஜரின் உருவப்படத்தை வரைந்தும், உயர்நிலை வகுப்பு மாணவர்கள் 'கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு' என்ற தலைப்பில் 5 நிமிடத்திற்கு மிகாமல் பேசி வீடியோ எடுத்து பெயர், வகுப்பு, பள்ளி முகவரி, மொபைல் எண் குறிப்பிட்டு 9443046295 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 'காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகள்' என்றத் தலைப்பிலும், கல்லுாரி மாணவர்கள் 'காமராஜர் கொண்டு வந்த நீர்ப்பாசனத் திட்டங்கள்' என்றத் தலைப்பிலும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி பெயர், வகுப்பு, பள்ளி / கல்லூரி முகவரி, மொபைல் எண் குறிப்பிட்டு, செயலாளர், கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல், எண்-50, லால்கான் தெரு, சிதம்பரம் 608 001 என்ற முகவரிக்கு வரும் 13ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.
இத்தகவலை மாவட்ட சர்வோதய மண்டல் செயலாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.