நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் டாக்டர் அருண்மொழிச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பள்ளி நிர்வாகி உஷா, முதுகலை ஆசிரியர் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமையாசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

