ADDED : மார் 14, 2024 04:16 AM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். ஊராட்சி தலைவர் சற்குருநாதன், தேசிய நல்லாசிரியர் ஏகாம்பரம், தங்கமணி, மதனகோபால் பேசினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர் செந்தில் தங்கமணி பரிசு வழங்கினார். விழாவில், தலைமை ஆசிரியர்கள் முருகன், கலைச்செல்வி, கயல்விழி, ராஜேஸ்வரி, செல்வகுமாரி, கஸ்துாரி, விதுபாலா, சம்பத், பிரசன்னா, வார்டு உறுப்பினர் கமலகண்ணன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் எபிநேசர் சாமுவேல், நன்றி கூறினார்.
