நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தேவனாம்பட்டினம் மாணிக்கம் நினைவு மழலையர் தொடக்கப் பள்ளி 23ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு மேயர் ராதாகிருஷ்ணன் காலேஜ் ஆப் பார்மசி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் குப்புராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்கி மழலையர் தொடக்கப் பள்ளி முதல்வர் கதர்வேலு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் மலர்விழி நன்றி கூறினார்.

