ADDED : ஏப் 07, 2025 05:03 AM

அ நிறம் | அளவு
புவனகிரி புவனகிரி அடுத்த தலைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை வசந்தா வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்சங்கு, ஆசிரியர் பயிற்றுநர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, லட்சுமி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். பின், புவனகிரியில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கினர். விழாவில், எஸ்.எம்.சி., தலைவர் அதிர்ஷ்டவதி உட்பட பலர் பங்கேற்றனர்.
