ADDED : மார் 31, 2026 07:13 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் சிங்காரவேலர் கார்டன், அரிஸ்டோ பெண்கள் பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.
விழாவில் பள்ளி மாணவி தலைவர் ஆராதனா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார்.
பேச்சாளர் அன்னபாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நடந்தது.
பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, பள்ளித்தலைவர் சிவக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் ஆகியோர் பங்கேற்று மாணவிகளை பாராட்டினர். ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர். இலக்கிய மன்ற தலைவர் அக் ஷரா நன்றி கூறினார்.
