
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா நடந்தது. விழா விற்கு பள்ளி செயல் இயக்குனர் சாலை கனகதாரன் தலைமை தாங்கினார்.
பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் இளையகுமார் வரவேற்றார். ஒருங்கிணைப் பாளர் உஷா ராணி ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி முன்னாள் மாணவர்களும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் டாக்டர்கள் ஜெயசீலன், பாரதிதாசன், சாலை தனிகைவேல், சித்தார்த்தன், இன்ஜினியர்கள் மஞ்சளரசி தினேஷ், மகிஷ வேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.

