/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெளி நபர்களால் சேதமாகும் பள்ளி மைதானங்கள் மாணவர்களின் விளையாட்டுத்திறன் பாதிப்பு
/
வெளி நபர்களால் சேதமாகும் பள்ளி மைதானங்கள் மாணவர்களின் விளையாட்டுத்திறன் பாதிப்பு
வெளி நபர்களால் சேதமாகும் பள்ளி மைதானங்கள் மாணவர்களின் விளையாட்டுத்திறன் பாதிப்பு
வெளி நபர்களால் சேதமாகும் பள்ளி மைதானங்கள் மாணவர்களின் விளையாட்டுத்திறன் பாதிப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:36 AM
விருத்தாசலம்: அரசுப் பள்ளி விளையாட்டு மைதானங்களில் வெளிநபர்கள் நுழைந்து பாழாக்குவதால், மாணவர்கள் பயிற்சி பெற முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தடகளம், கைப்பந்து, கால்பந்து, வாலிபால், எறிபந்து, இறகுபந்து உட்பட பல்வேறு போட்டிகளுக்கு உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி தரப்படுகிறது.
தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த குறுவட்ட போட்டிகளில் பங்கு பெற செய்து, வெற்றி பெறுவோர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக விளையாட்டு மைதானங்கள் பராமரிக்கப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை 6:00 மணிக்கு மேல், பூட்டியிருக்கும் அரசுப் பள்ளிகளுக்குள் சுவர் ஏறி குதித்து வரும் நபர்கள், மாலை வரை கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை விளையாடி செல்கின்றனர்.
பள்ளி தளவாடப் பொருட்களையும் சேதப்படுத்துகின்றனர். குடிநீர் பைப்புகள், கழிவறை உபகணரங்களை உடைத்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றுகின்றனர். இதனால் வார துவக்கத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், போலீசாரும் கண்டுகொள்ளாமல் விடுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சேதமடைந்த மைதானங்களை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மதுபான பாட்டில்கள் குவிந்து கிடப்பதால், மாணவ, மாணவிகளின் மனநிலை பாதிக்கிறது. காலையில் வகுப்புக்கு வரும் ஆசிரியர்களே இவற்றை அகற்றும் அவல நிலையும் தொடர்கிறது. விருத்தாசலம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் மாலை வகுப்புகள் முடிந்ததும் சிலர் மைதானங்களை ஆக்கிரமித்து கிரிக்கெட், வாலிபால் போன்ற போட்டிகளில் ஈடுகின்றனர். அவர்களை தலைமை ஆசிரியர்கள் தட்டிக் கேட்கும் போது மிரட்டல் விடுப்பது தொடர்கிறது.
எனவே, அரசுப் பள்ளி விளையாட்டு மைதானங்களை வெளிநபர்கள் பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.

