ADDED : ஜன 29, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: பண்ருட்டி ரத்தனா பள்ளி மாணவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை புரிந்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா- 2026, ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி, பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பண்ருட்டி ரத்தனா பள்ளி மாணவர் மோகனகிருஷ்ணன் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் மோகனகிருஷ்ணனை பள்ளி நிர்வாகம் சார்பாக முதல்வர் ரவி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
