/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி
/
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி
ADDED : ஆக 29, 2025 03:09 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்த காட்டு கூடலுார் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் இருசப்பன். தச்சுதொழிலாளி. இவரது மனைவி லதா,45; இருசப்பன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டார்.
இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ராமஜெயம்,17; பேர்பெரியாண்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள பாலமுருகன் கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
விழாவை முன்னிட்டு கோவில் அருகில் உள்ள மேடை யில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை ராமஜெயம் மைக்கில் அறிவிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் துாக்கி வீசப்பட்டார்.
அங்கு இருந்தவர்கள் ராமஜெயத்தை மீட்டு நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராமஜெயத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.