ADDED : அக் 10, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: திட்டக்குடி அடுத்த நிதிநத்தத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராகுல்ராஜ், 11. இவர் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் பள்ளி முடிந்து, பழைய பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியே வந்த காய்கறிகள் வியாபாரம் செய்யும் டாடா ஏஸ் வேன் மோதி படுகாயமடைந்தார். மாணவனை அருகிலுள்ளவர்கள் மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.