sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பள்ளி மாணவர் தற்கொலை

/

 பள்ளி மாணவர் தற்கொலை

 பள்ளி மாணவர் தற்கொலை

 பள்ளி மாணவர் தற்கொலை


ADDED : ஜன 10, 2026 06:43 AM

Google News

ADDED : ஜன 10, 2026 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி ஜன. 10-: நெய்வேலியில் பள்ளி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிதம்பரத்தை அடுத்த வத்தராயன் தொத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலசுந்தரம். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் திவாகர். 15;

சிவபால சுந்தரத்தின் சகோதரி கணவர் செல்வம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 10ல் உள்ள என்.எல்.சி., குடியிருப்பில் வசித்து வசித்து வருகிறார்.

அவர், என்.எல்.சி., 2 ம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திவாகர் தனது மாமா செல்வம் வீட்டில் தங்கியிருந்து கடந்த 8 ஆண்டுகளாக நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

தற்போது 10 ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திவாகர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால், அவரது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என திவாகரிடம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திவாகர் தனது பெற்றோரிடம் கூறியும் அவர்கள் நேற்று வர தாமதமானதால் பயந்துபோன திவாகர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன்ஷிப் சப்இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us