தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மாணவர்கள் சாதனை

 பள்ளி மாணவர்கள் சாதனை

 பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : பிப் 18, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள், ஆங்கில மொழித்திறன் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

கடலுார் எஸ்.எஸ்.ஆர்.,நகரில் உள்ள லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள், திருநெல்வேலியில் நடந்த பாரத் இன்ஸ்டியூட்டில் நடந்த ஆங்கில மொழித்திறன் தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வெழுதிய 57 மாணவ, மாணவிகளில் 23 பேர் 85 சதவீத மதிப்பெண்களும், 5 மாணவர்கள் 70 சதவீத மதிப்பெண்களும், 4 மாணவர்கள் 60 சதவீத மதிப் பெண்களும் பெற்றனர்.

பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாநில அளவிலான தேர்வில் பங்கேற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் மாவீர்மல் சோர்டியா, தலைமையாசிரியர் சந்தோஷ்மல் சோர்டியா, பாத்தாகன், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோர்டியா, ஆங்கில ஆசிரியை சித்ரா, சசிகலா, இன்பவல்லி ஆகியோர் பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us