/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிப்., 1ல் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி; பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கலாம்

ADDED : ஜன 29, 2025 11:16 PM
கடலுார் : கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் அமைப்பின் சார்பில், கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் கடலுாரில் நடக்கிறது.
கடலுார் மெட்ரோ பிரண்ட்ஸ் குழு, கடந்த 50ஆண்டுகளாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது.
இதன் சார்பில் பிப்.,1 மற்றும் 2ம் தேதிகளில் கடலுார் செம்மண்டலத்தில் உள்ள வரதராஜன் நகர் பூங்கா, மெட்ரோ பிரண்ட்ஸ் மைதானத்தில் பள்ளிளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது.
ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.