ADDED : மார் 19, 2026 04:22 AM

மந்தாரக்குப்பம்: பள்ளி மாணவர்கள் போலியோவை ஒழிக்க நிதி திரட்டி ரோட்டரி சங்கத்திடம் வழங்கினர்.
சர்வதேச அளவில், போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், விருத்தாசலம் ஜெயப்பிரியா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி, நெய்வேலி, ரோட்டரி சங்கத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர், பள்ளி இயக்குநர் தினேஷ், பள்ளி முதல்வர் நித்யா ஆகியோர் முன்னிலையில், 1 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி ரோட்டரி கிளப் ஆப் நெய்வேலி லிக்னைட் சிட்டி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் பாலாஜி, போலியோ பிளஸ் சேர்மன் சிவசந்திரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், சந்திர மவுலி, அருள்மணி, ராஜேஷ், ஆகியோர் நிதி திரட்டிய மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
