UPDATED : நவ 24, 2026 10:14 PM
ADDED : நவ 24, 2026 10:14 PM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊாட்சியில் உள்ள பழையபாளையம் தெருவின் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நுாலகம் உள்ளது. இந்த சாலை வழியாக தான் இப்பள்ளியில் படிக்கும் நுாற்றுக்கணக்கான மாணவர்களும் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை, தற்போது பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மழைகாலத்தில் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால்,சைக்கிளில் வரும் மாணவிகள் பள்ளத்தில் விழுந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
