/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்
/
பள்ளி வேன் கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்
ADDED : ஜன 31, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : ராமநத்தம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து, 4 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்கள் 30பேர், நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து, பள்ளி வேனில் வீடு திரும்பினர். இரவு 8:00 மணியளவில் கண்டமத்தான் சாலையில் சென்றபோது, சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதில் வேனில் இருந்த மாணவர்கள் ஹரிஹரன், ஸ்ரீமதி, கணபதி உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர். அனைவரும் ராமநத்தம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.