ADDED : ஜன 04, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை, நெசவாளர் குடியிருப்பை சேர்ந்தவர் சபரி, 44. மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் இமையா, 14; குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.
நேற்று மீண்டும் வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
