/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி
/
ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி
ADDED : ஜன 06, 2025 06:38 AM

பெண்ணாடம் :   பெண்ணாடம் அருகே ஊஞ்சல் ஆடிய மாணவி, கயிற்றில் சிக்கி இறந்தார்.
பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 39; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா,37;  இவர்களுக்கு சந்துரு,15; என்ற மகனும், ரிதுவர்ஷினி,13;  மகளும் உள்ளனர். இருவரும், பெண்ணாடத்தில் உள்ள பள்ளியில் முறையே 10 மற்றும் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
நேற்று காலை அனிதா வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்.  விடுமுறையில் வீட்டில் இருந்த ரிதுவர்ஷினி, வீட்டிற்குள் நைலான் கயிற்றில் ஊஞ்சல் ஆடியபோது,  எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறு மாணவியின் கழுத்தில் இறுகியது.
ரிதுவர்ஷினி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று, அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
தகவலறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், ரிதுவர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

