ADDED : ஜன 25, 2025 02:36 AM
நெய்வேலி: நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி- பிளாக் பகுதியை சேர்ந்தவர் சுண்முகவேல். ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் தனது ஆட்டோவில், வட்டம் 19 ல் உள்ள தனியார் பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்ற தனது மகள் நிவேதிகா, 7; வை அழைத்துக்கொண்டு என்.எல்.சி., மருத்துவமனை வழியாக வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த ஒருவர் ஆட்டோவை முந்தி செல்ல முயன்றார். அப்போது அவருக்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது, திடீரென ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய பள்ளி மாணவி நிவேதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவியின் தந்தை சண்முகவேலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு என்.எல்.சி., மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

