/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் அறிவியல் மாநாடு
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் அறிவியல் மாநாடு
ADDED : ஜன 24, 2025 11:08 PM

மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியில் அறிவியல் மாநாடு நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஜெயப்பிரியா கல்விக் குழுமம் இணைந்து, 32 வது அறிவியல் மாநாட்டை நடத்தியது. 80 பள்ளிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி தலைமை தாங்கினார், ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழும இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.
அதில், நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயல்முறைகளை செய்து காட்டினர்.
ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர், நீர் மேலாண்மை குறித்த செயல் திட்டத்தை சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், அப்துல் கலாம் போன்று இளம் வயதிலேயே சிறந்த சிந்தனை உடைய அறிவியல் விஞ்ஞானிகளாக வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பள்ளி செயலாளர் சிந்து, பள்ளி முதல்வர்கள் பிந்து நாயர்,சிதம்பரி, ஆசிரியர்கள், மாணவர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.