/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹயகிரிவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
ஹயகிரிவர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 19, 2024 11:46 PM

கடலுார், : கடலுார் ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
டி.வி.ஆர்.,கல்வியியல் கல்லுாரி மற்றும் ஹயகிரிவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பவானிஅம்மாள் அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி, கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் லோகேஸ்வரி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றினர். பள்ளி முதல்வர் லெரு அலெக்சாண்டர் சேவியர், ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.
கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சந்திராயன் ராக்கெட், இதயம், நீர்வீழ்ச்சி, சோலார் இயந்திரம், எரிமலை, இயந்திர மனிதன் போன்ற அறிவியல் தொடர்பான மாதிரிகள் காண்போரின் பாராட்டை பெற்றது.
அறிவியல் ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். அறிவியல் கண்காட்சியின் ஒருபகுதியாக உணவு திருவிழா நடந்தது.
இதில் பாரம்பரிய உணவு முதல் நவீன கால உணவுமுறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கண்காட்சியை கண்டு பாராட்டினர். சிறந்த படைப்புகளை இடம்பெறசெய்திருந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.