நிர்வாகிகளுக்கு ஸ்கூட்டி பா.ஜ., பிரமுகர் 'பலே' திட்டம்
நிர்வாகிகளுக்கு ஸ்கூட்டி பா.ஜ., பிரமுகர் 'பலே' திட்டம்
ADDED : ஜன 21, 2026 06:30 AM
த மிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, அ.தி.மு.க., தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஒரு படி மேலே சென்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளிருக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை, ஆண்களுக்கு இலவச பேருந்து, 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் ரூ.25,000 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பா.ஜ., வினர் தங்கள் கட்சித் தலைமை யிடம் காய் நகர்த்தி வருகின்றனர்.
இதில் பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலர் ஒருவர், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம் வடக்கு மற்றும் தெற்கு, குமராட்சி ஒன்றியம், சிதம்பரம் நகர நிர்வாகி, முழுநேர ஊழியர் ஒருவர் என, 5 நிர்வாகிகளுக்கு ஸ்கூட்டி வாங்கித் தந்து, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும் தொகுதி அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த 5 நிர்வாகிகளுக்கும், அடுத்த மாதம் முதல் வாரத்தில், ஸ்கூட்டிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
