தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாரணர் பயிற்சி முகாம் 

 சாரணர் பயிற்சி முகாம் 

 சாரணர் பயிற்சி முகாம் 


ADDED : பிப் 28, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமீபத்தில், சாரண சாரணியர் கல்வி மாவட்டத்தின் சார்பில், இரு தினங்களுக்கு திருத்திய சோபன் பயிற்சி முகாம் மற்றும் குருளையர், நீலப்பறவையர் மாநில தேர்வு முகாம் நடந்தது.

இதில், 16 பள்ளிகளை சேர்ந்த சாரணர்கள் - 120 பேர்; சாரணியர்கள் - 75 பேர்; சாரண ஆசிரியர்கள் - 21 பேர்; சிதம்பரம், வடலுார், திருவாரூர் சாரண மாவட்டத்தில் இருந்து குருளையர் - 29 பேர்; நீலப்பறவையர்கள் - 19 பேர் பங்கேற்றனர்.

மாநில முதன்மை தேர்வாளர்கள், குருளையர் பிரிவில் கரூரை சேர்ந்த வெங்கடே சன், நீலப் பறவையர் பிரிவில் சென்னையை சேர்ந்த ரேகா ஆகியோர் தேர்வு முகாமை நடத்தினர்.

இதில் சாரண, சாரணிய இயக்க வரலாறு, பாடல் பயிற்சி, முதலுதவி, உள்ளிட்ட பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

நிறைவு விழாவில், மாவட்ட சாரண தலைவர் குமார் தலைமை தாங்கினார். சாரண அமைப்பு ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார் . சாரண அமைப்பு ஆணையர் வேலாயுதம் வரவேற்றார். வீனஸ் பள்ளி முதல்வர் லியோ பெஸ்கிராவ், பயிற்சியாளர் இளையகுமார், பொருளாளர்கள் சோமசுந்தரம், மதன்ராஜ், வெங்கடேசன், லட்சுமணன், வாசுகி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாவட்ட சாரண செயலர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us