/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐ.டி., ஊழியரிடம் மோசடி கடலுார் தொழிலாளி கைது
/
ஐ.டி., ஊழியரிடம் மோசடி கடலுார் தொழிலாளி கைது
ADDED : நவ 15, 2024 02:27 AM

திண்டுக்கல்,:திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் ஆரோன் என்பவர், வீட்டிலிருந்தபடியே சில மாதங்களாக வேலை செய்து வந்தார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, டிரேடிங் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என, கவர்ச்சிகர குறுந்தகவல் கடந்த ஆகஸ்டில் வந்தது. அதை நம்பிய ஆரோன், 25,000 ரூபாயை அனுப்பினார். பணம் அனுப்பியதும் எதிர்திசையில் பேசிய நபர், தன் மொபைல் போனை, சுவிட்ச் - ஆப் செய்து தலைமறைவானார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோன், சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
ஆரோன் பணம் அனுப்பிய வங்கி கணக்கை போலீசார் விசாரித்ததில், கடலுார் மாவட்டம் திட்டக்குடி பொன்னடம் கூலித்தொழிலாளி ஆகாஷுடையது என்பதும், அவரே மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இதையடுத்து, ஆகாஷை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.