/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இரண்டாவது திருமணம்: மின் ஊழியருக்கு சிறை
/
இரண்டாவது திருமணம்: மின் ஊழியருக்கு சிறை
ADDED : ஜன 07, 2025 07:31 AM
விருத்தாசலம்; முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த மின் ஊழியருக்கு விருத்தாசலம் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி, அம்பேரிமேட்டை சேர்ந்தவர் பிரேம்குமார், 52. மின் ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 48. ரேஷன் கடை விற்பனையாளர். இருவருக்கும் கடந்த 2000ல் திருமணமாகி, ஒரு மகன் உள்ளார்.
பிரேம்குமார் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனது தாய் வீட்டில் கணவருடன் ராஜேஸ்வரி வசித்து வந்தார். சில மாதங்களில் ராஜேஸ்வரியை பிரிந்து சென்ற பிரேம்குமார், ஜெயலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து, பிரேம்குமார், ஜெயலட்சுமி உட்பட 8 பேர் மீது கடந்த 2007ல் விருத்தாசலம் மாஜிஸ்திரேட் (1) கோர்ட்டில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எதிர்த்து, 2011ல் சென்னை ஐகோர்ட்டில் பிரேம்குமார் மனு தாக்கல் செய்தார்.
இதில், பிரேம்குமார் தவிர்த்து மற்றவர்களை வழக்கில் இருந்து விடுவித்த ஐகோர்ட், விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கை தொடருமாறு உத்தரவிட்டது.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று பிரேம்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.

