ADDED : செப் 12, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
வேப்பூர்: வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ், விதைச் சான்றளிப்பு மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.
நல்லுார் ஒன்றிய வேளாண் அலுவலர் தினேஷ் தலைமை தாங்கினார். விதைச்சான்று அலுவலர் மகேஷ், தோட்டக்கலை துறை துணை அலுவலர் செல்வகுமார், விதை உதவி அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தர்ராஜன் வரவேற்றார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், குமரேசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், விதை பண்ணை அமைப்பதற்கான மானியம், பழ மரக்கன்றுகள், காய்கறிகள் விதைப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, தரமான விதைகள் உற்பத்தி உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
