/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொளசூர் மகா பெரியவா நகரில் சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம்
/
மொளசூர் மகா பெரியவா நகரில் சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம்
மொளசூர் மகா பெரியவா நகரில் சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம்
மொளசூர் மகா பெரியவா நகரில் சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம்
ADDED : ஏப் 28, 2025 05:47 AM

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த மொளசூரில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் மகோற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில் உள்ளது மொளசூர் கிராமம். இங்குள்ள திண்டிவனம் ஆர்.டி.ஒ., அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது ஸ்ரீ அக்ரஹாரம் குளோபல் டவுன்ஷிப் - ஸ்ரீ மகாபெரியவா நகர். மொளசூர் புண்ணிய சேஷத்திர அக்ரஹாரத்தில், 25ம் தேதி காலை துவக்க விழா நடந்தது. புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, திருப்பதி ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் மகோற்சவம் நடந்தது. அன்று மாலை 5:00 மணிக்கு மஹா சங்கல்பத்தை தொடர்ந்து திருக்கல்யாணம் மகோற்சவம், ஸ்ரீ அக்ரஹார ப்ரதான ஆச்சாரியார் குருஜி ஸ்ரீ ஹனுமான் தாஸ் ஸ்வாமிகள் பஞ்சமுக ஆஞ்சநேயர் பீடம் (வடகுடி) தலைமையில் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது.
திருக்கல்யாணத்தையொட்டி, சீர்வரிசை எடுத்து வருதல், மஹா சங்கல்பம், ஸ்ரீஅஷ்டலட்சுமி ேஹாமம், புண்ணியாகவாசனம், அக்னி பூஜை நடந்தது.
தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு வஸ்திரம் ஓதி கொடுத்தல், உபசாரங்கள், திருமாங்கல்ய பூஜையும், திருமாங்கல்ய தாரணம், விசேஷ அர்ச்சனை், தீபாராதனை நடந்தது.
திருக்கல்யாண மகோற்சவத்தில், சக்தி குரூப்ஸ் எம்.டி., பார்த்திபன், ஸ்ரீ அக்ரஹாரம் குரூப்ஸ் எம்.டி., ஆலங்குடி கீர்த்திவாசன் ஐயர், சக்தி குரூப்ஸ் ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.