/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வண்டல் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
/
வண்டல் மண் எடுத்த டிராக்டர் பறிமுதல்
ADDED : செப் 19, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அருகே அனுமதியின்றி வண்டல் மண் எடுத்த டிராக்டரை ஆவினங்குடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி அடுத்த பட்டூர் தனியார் கம்பெனி அருகே மெயின்ரோட்டில் சிலர் டிராக்டரில் வண்டல் மண் எடுத்துச்சென்றனர்.
அவ்வழியே சென்ற திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி வண்டல் மண் எடுத்துச்சென்றது தெரிந்தது.
இதையடுத்து டிராக்டர் மற்றும் டிப்பரை ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். வி.ஏ.ஓ.,மகேந்திரன் அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.