/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்
/
குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்
ADDED : அக் 27, 2024 04:43 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி குடிநீர் குழாயில் சட்டவிரோதமாக பொறுத்திய மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் நடந்த நகரமன்ற கூட்டத்தில் துணைத் தலைவர் கிரிஜா பேசும்போது, எனது வார்டில் குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் பொறுத்தியுள்ளனர். இதனால் பெரும்பாலானவர்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உள்ளதாக புகார் தெரிவித்தார்.
மேலும், நகரம் முழுவதும் இதுபோன்று நிலை இருந்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்.
இந்நிலையில், நகரமன்றத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டதால், கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில், இன்ஜினியர் வெங்கடாஜலம் மற்றும் அலுவலர்கள், வாழப்பட்டு பகுதியில் குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக பொறுத்தியிருந்த நான்கு மின் மோட்டார்களை பறிமுதல் செய்ததோடு குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.