ADDED : பிப் 04, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : ராமநத்தம் அருகே லாரியில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொரக்கவாடி அருகே சென்றபோது, அங்கு, வெள்ளாற்றில் சட்டவிரோதமாக இருவர் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பியோட, ஒருவர் சிக்கினார்.
விசாரணையில் போலீசில் சிக்கியவர் பெரம்பலுார் மாவட்டம், வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த சூரியா,23, என்பதும், தப்பியோடியவர் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என தெரிந்தது. சூரியாவை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய வேல்முருகனைத் தேடிவருகின்றனர்.