/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்திய கூட்டுறவு வங்கியில் கருத்தரங்கு
/
மத்திய கூட்டுறவு வங்கியில் கருத்தரங்கு
ADDED : நவ 18, 2024 07:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; விருத்தாசலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரா ஆகியன இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 'காலத்திற்கு ஏற்ப கூட்டுறவில் புதிய முயற்சிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நிர்வாகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, உதவி பேராசிரியை காயத்ரி ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் வங்கிப் பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.