/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைப்பொருளால் பாதிப்பு அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
/
போதைப்பொருளால் பாதிப்பு அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
போதைப்பொருளால் பாதிப்பு அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
போதைப்பொருளால் பாதிப்பு அரசு கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : டிச 27, 2025 06:42 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னை குறித்து கருத்தரங்கு நடந்தது.
தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் முனியன் தலைமை தாங்கினார்.
உதவி பேராசிரியர் பரமசிவம் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் ராஜகுமார், டாக்டர் அன்புக்குமார், இணை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் தனவேல், சினிமா இயக்குனர் சுந்தரராஜன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
அதில், போதைப்பொருட்களால் ஏற்படும் வாழ்வியல் பிரச்னைகள், உடல்நலன் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள், பாதிக்கும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், குற்றவியல் தண்டனைகள், வேலை வாய்ப்பு இழப்பு, சினிமா உள்ளிட்ட என பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் குருதேவன் நன்றி கூறினார்.
முன்னதாக, 'போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம், அவற்றை அனுமதிக்க மாட்டோம்' என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

