
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எருமனுார் சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை மற்றும் வணிக மேலாண்மை துறை சார்பில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
வணிகவியல் மேலாண்மை துறைத் தலைவர் செல்வக்குமார் வரவேற்றார். கல்லுாரி புல முதன்மையர் கவிப்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி ரிலையன்ஸ் ஜியோ மனிதவள மேலாளர் ராகேஷ் மனோகரன் சிறப்பு விருத்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான கருத்துகளை வழங்கினார். பேராசிரியர்கள் சரண்யா, பாரதிதேவி, ரஞ்சிதம். ஜானகி மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார்.