
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சாகுபடி குறித்து கருத்தரங்கு நடந்தது.
இறையூர் எஸ்.என்.ஜெ., சர்க்கரை ஆலை, கோயம்புத்துார் கரும்பு இனப்பெருக்க நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆலையின் முதுநிலை உப தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
கரும்பு ஆலோசகர் கிருஷ்ணன், கரும்பு பொது மேலாளர்கள் திருஞானம், புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்துார் கரும்பு இனப்பெருக்க நிலைய ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, வரும் கரும்பு பருவத்திற்கான மானியங்கள் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கரும்பு மேலாளர் குமரன் நன்றி கூறினார்.

