/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் தொழிலதிபருக்கு சேவை செம்மல் விருது
/
புவனகிரியில் தொழிலதிபருக்கு சேவை செம்மல் விருது
ADDED : மார் 20, 2024 05:10 AM

புவனகிரி : புவனகிரி தொழிலதிபர் ரத்தினசுப்ரமணியனுக்கு, தமிழ் பேரவை சார்பில், சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
புவனகிரி தமிழ்ப்பேரவையின் 43வது ஆண்டு விழா, புவனகிரி பாரதி பள்ளி வளாகத்தில் நடந்தது. பேரவை தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். பாலச்சந்தர் துவக்கவுரையாற்றினார். பாரதி பள்ளி நிர்வாகி அன்பழகன், பேரவை செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் குமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
பட்டிமன்ற நடுவர் சுகிசிவம் தலைமையில் 'பெண்மையை பெரிதும் போற்றும் காவியம் சிலப்பதிகாரமே' எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
விழாவில், புவனகிரி தொழிலதிபர் ரத்தினசுப்பிரமணியன் சேவையை பாராட்டி சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை தனுசு திருப்புகழ்ச் செல்வர், ராஜாராம் அறப்பணி செல்வர் விருதும் பெற்றனர்.
விருது பெற்றவர்களை, கே.பி பட்டு மஹால் உரிமையாளர் பாலமுருகன் ஜெகன், ராம்குமார் டிரேடர்ஸ் ராம்குமார், அபிராமி பட்டு ராணிபன்னீர்செல்வம், புவனகிரி அரிமா சங்கர் நிர்வாகிகள் சுப்ரமணியன், மகாலிங்கம், சேதுராமன், ஜெயலட்சுமி டெக்ஸ் சரவணன், மணி ஜுவல்லரி பிரகாஷ், கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன், ஆரிய வைசிய சங்கத் தலைவர் சுந்தரேசன், புவனகிரி டெக்ஸ் திருக்குறள் ஆறுமுகம், வி.எம்.எஸ். பட்டு சிவக்குமார், பரணி மெடிக்கல்ஸ் பூரணம் ஹரி, அருணாச்சலா பார்மசி ஜெகதீசன், தனலட்சுமி ஜூவல்லர்ஸ் நடராஜன், சரஸ்வதி பிரேம் ஒர்க்ஸ் மோகன், லட்சுமி விலாஸ் பாத்திரக்கடை முரளி, பிஸ்மி ஜுவல்லர்ஸ் சையத் அர்சலாம், வெங்கட்ராமன் ஐயர் சன்ஸ் குழுவினர் சார்பில் முரளி, சாரதா ஸ்வீட்ஸ் ரவி, கிரீடு நிறுவன இயக்குனர் நடனசபாபதி, ராஜேஸ்வரி பட்டு சண்முகம், மகாராஜா பட்டு பாலமுருகன், செந்தில் ஆப்செட் செந்தில்குமார், கே.வி.பி வங்கி மேலாளர் தினேஷ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபாலன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
பேரவை பொருளாளர் ஜெகன் நன்றி கூறினார்.

