/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
/
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 01:51 AM
கடலுார்: கடலுார் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுக் கூட்டம் செல்லங்குப்பம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
சங்க மாவட்டத் தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநகரத் தலைவர் பக்கிரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமசாமி, சங்க செயல்பாடு, வளர்ச்சி மற்றும் ஊழியர்கள் பிரச்னைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், நிர்வாகிகள் பக்கிரி, ராதாகிருஷ்ணன், ராமலிங்கம், ராமகிருஷ்ணன், பக்தவச்சலம், ராஜமாணிக்கம், இந்திராவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதியோர் தினம் கொண்டாடுவது. கடலுார் மாநகராட்சியில் ஓய்வுப் பெற்ற துாய்மைப் பணியாளர்களுக்கு வைப்பு நிதி, வட்டிப் பணம் வழங்க கோரி வரும் 22ம் தேதி கடலுாரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்மணி நன்றி கூறினார்.