ADDED : அக் 03, 2024 11:08 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு சார்பில் உலக முதியோர் தின விழா, ஆணைக்குப்பத்தில் நடந்தது.
விழாவில் சங்க தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார். ஹெல்ப்பேஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர் பாரத்வேல், ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி அலுவலர் திருமலை சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
சங்க நிர்வாகிகள் கருணாநிதி, துணைத் தலைவர் தர்மராஜ், விஜயலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள், மூத்த குடிமக்கள், தன்னார்வளர்கள் பங்கேற்றனர்.
சங்க இணை செயலாளர் பானுமதி நன்றி கூறினார்.
