/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்மன் கோவில்களில் செடல் திருவிழா
/
அம்மன் கோவில்களில் செடல் திருவிழா
ADDED : ஆக 08, 2025 11:54 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதி அம்மன் கோவிகளில் ஆடி மாத செடல் திருவிழா நடந்தது.
ஆடி மாத நான்காவது வெள்ளியையொட்டி விருத்தாசலம், புதுக்குப்பம் மாரியம்மன், பெரியார் நகர் டிரைவர் குடியிருப்பு மாரியம்மன், செம்பளக்குறிச்சி கருமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களின் பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து, பால்குடம் சுமந்தும், செடல் அணிந்தும் அந்தந்த கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
30வது வார்டு, காந்தி வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.