/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு செயற்பொறியாளர் ஆய்வு
/
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு செயற்பொறியாளர் ஆய்வு
ADDED : நவ 28, 2024 07:11 AM

சேத்தியாத்தோப்பு: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் கொள்ளிட வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதியில் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நேற்று வெள்ளாறு பாசனம் மற்றும் வடிகால் பகுதிகளை செயற்பொறியாளர் காந்தரூபன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, ஏ.டி.சி,, மதகு, 25 கண்மதகு ஷட்டர் வடிகால், குமாரக்குடி வடிகால் வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்கள ஆய்வு செய்தார்.
மழையால் உடைப்பு ஏற்படும் பகுதிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள் குறித்தும், அதிகப்படியான வெள்ளம் மழை சமாளிப்பதற்கான பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், அணைக்கட்டிற்கு வரும் மழைவெள்ள நீரினை படிப்படியாக வடிய வைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான், பணியாளர்கள் செந்தில், கலையரசன், மூர்த்தி,ரமேஷ்கமல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.