/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போர்வெல் மோட்டார் தொடர் திருட்டால் சேத்தியாத்தோப்பு விவசாயிகள் பாதிப்பு
/
போர்வெல் மோட்டார் தொடர் திருட்டால் சேத்தியாத்தோப்பு விவசாயிகள் பாதிப்பு
போர்வெல் மோட்டார் தொடர் திருட்டால் சேத்தியாத்தோப்பு விவசாயிகள் பாதிப்பு
போர்வெல் மோட்டார் தொடர் திருட்டால் சேத்தியாத்தோப்பு விவசாயிகள் பாதிப்பு
ADDED : நவ 04, 2025 01:26 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்களில் தொடர்ந்து மின் மோட்டார்களை திருடும் கும்பலால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரம், புவனகிரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவி ல் உள்ளிட்ட தாலுக்கா கிராமங்களில் போர்வெல் மின்மோட்டார் மூலம் விவசாயிகள் சம்பா, குறுவை ஆகிய இரண்டு பருவங்களில் நெல் நடவு செய்து வருகின்றனர்.
விவசாய நிலங்களில் போர்வெல் மின்மோட்டர்களில் உள்ள ஒயர், கிணற்றிற்கு மேல் உள்ள மின் மோட்டார்கள், ஷாட்டர், காப்பர் ஒயர்கள், பீஸ் கேரியர்களை மர்ம நபர் தொடர்ந்து திருடி வருகின்றனர்.
விவசாயிகள் இரவு நேரங்களில் மோட்டர் கொட்டைகளுக்கு செல்லாத இடங்களை கண்காணித்து மர்ம நபர்கள் திருடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
சில விவசாயிகள் இது தொடர்பாகக புகார் கொடுத்து வழக்குப் பதிந்தாலும் திருடு போன மின்மோட்டார்களை போலீசார் கண்டுபிடித்து கொடுப்பதும் கிடையாது.
போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க சென்றால், திருடுபோன பொருட்களை விட போலீசாருக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்ற அச்சத்தில் பல விவசாயிகள் புகார் கொடுக்க கூட முன் வராமல் விட்டு விடுகின்றனர்.
கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளின் மின்மோட்டார்கள் திருடு போவதால் விவசாய பணிகளை குறித்த பருவங்களில் மேற்கொள்ளமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடும் கும்பலை தனிப்படை அமைத்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

