/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்சி பொருளாக கழிவுநீர் அகற்றும் வாகனம்
/
காட்சி பொருளாக கழிவுநீர் அகற்றும் வாகனம்
ADDED : ஜன 02, 2025 08:33 PM

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரி இல்லாததால் தனியார் லாரிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வீட்டின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்து வருகின்றனர்.
இதற்கு ரூ.7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதால் சிரமமாக இருந்ததால் பொதுமக்கள் நகராட்சி சார்பில் டேங்கர் லாரியை வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரிக்கை விடுத்தனர்.
நகராட்சியில் பயன்படாமல் இருந்த குப்பை எடுக்கும் லாரியை புதுப்பித்து டேங்கர் லாரியாக மாற்றி கழிவுநீர் அகற்றும் வாகனமாக மாற்ற முடிவு செய்தனர்.
துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ.10 லட்சம் செலவில் பழைய லாரியை கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரியாக புதுப்பிக்கபட்டது. ஒரு மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்து செப்டிக் டேங்கை சுத்தம் செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

