/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர்
ADDED : நவ 03, 2024 06:58 AM

கடலுார்: கடலுார், செம்மண்டலத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கடலுார், செம்மண்டலம் வரதராஜன் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால், கழிவுநீர் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது பாதாள சாக்கடை அடைப்பை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.