ADDED : அக் 26, 2025 10:48 PM
வடலூர்: பிரதான சாலையில் கழிவுநீர் வழிந் தோடுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கடலூர் -விருத்தாச்சலம் பிரதான சாலையில், தினந்தோறும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
வடலூர் மசூதி எதிரில் உள்ள இந்த சாலையில் பழைய கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கழிவு நீர் பிரதான சாலையில் வழிந்து ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த பிரதான சாலையில் மழை நீர் கால்வாய் கட்டமைப்பு முழுமையாக இல்லை.
வடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
கழிவு நீர் வழிந்து ஓடுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
