ADDED : ஏப் 11, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார், சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, முத்துக்குமார் மனைவி வசந்தி, 45; ரங்கநாதன் மகன் ராமச்சந்திரன் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து, நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வசந்தி, ராமச்சந்திரன், 65; சரண்ராஜ், 18; ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்டனர்.

