/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை எஸ்.எப்.ஐ., போலீசில் புகார்

ADDED : பிப் 14, 2025 04:45 AM
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரி மாணவி ஒருவருக்கு, அதே கல்லுாரியில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில், எஸ்.எப்.ஐ.,சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்.எப்.ஐ., மாவட்ட செயலாளர் சவுமியா கூறுகையில், கல்லுாரியில் பணியாற்றும் ஊழியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதை கல்லுாரி நிர்வாகம் மறைக்கப் பார்க்கிறது. அதே கல்லுாரியில் மேலும் சில மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. போலீசார் அனைத்து மாணவிகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகார் மீது நடவடிக்கை இல்லையெனில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.