தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில்களில் சஷ்டி வழிபாடு

கோவில்களில் சஷ்டி வழிபாடு

கோவில்களில் சஷ்டி வழிபாடு


ADDED : செப் 28, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்,:சஷ்டியையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

இதே போன்று, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மணலுார் ஆதி கொளஞ்சியப்பர், மங்கலம்பேட்டை பால தண்டாயுதபாணி கோவில்களிலும் சஷ்டி வழிபாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us